நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் லைட் அடிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ”அத்தியாவசியமான அறிவிப்பு ஏதாவது சொல்வார் என பார்த்தால் நான் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே இப்போதுதான் அவர் வருகிறார்” என நக்கலாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பதிவுக்கு பதிலடி கொடுக்க பதிவிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ” சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே.” என்று கூறியுள்ளார்.