மோடிஜி 15 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்த ஆதாரம் தந்தால் ரூ.1லட்சம்: பாஜக அறிவிப்பு..

வெள்ளி, 14 ஜூலை 2023 (08:29 IST)
பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக  வாக்குறுதி கொடுத்த ஆதாரத்தை தந்தால் ஒரு லட்ச ரூபாய் பிளஸ் 200 ரூபாய் வழங்கப்படும் என பாஜக போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடலாம் அந்த அளவுக்கு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது என்று கூறினார். 
 
ஆனால் அதனை திரித்து ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் ரூபாய் மோடி தருவதாக வாக்குறுதி அளித்ததாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்
 
இந்த நிலையில் பிரதமர் மோடி 15 லட்சம் அனைவர் வங்கி கணக்கிலும் போடுவதாக வாக்குறுதி கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை அளித்தால் ரூபாய் ஒரு லட்சம் பிளஸ் 200 ரூபாய் பரிசு தயார் என பாஜக போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்