தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விதிமுறைகள்!
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:18 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
1)அதன்படி இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
2) சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.
3) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி.
4) வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் நிபந்தனை.
5) ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் மற்றும் டெபாசிட் தொகையை செலுத்தலாம். உள்ளிட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.