யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரண தொகை?- அரசு தகவல்

திங்கள், 11 டிசம்பர் 2023 (13:48 IST)
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையால், சென்னையில் உள்ள  பல பகுதிகள் வெள்ளத்தில் பபாதிக்கப்பட்டன. பலர் ஆபத்தான  நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டு முகாமகளில் தங்க வைக்கப்பட்டனர். அரசின் துரித முயற்சியையும், அதிகாரிகளின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந் நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை பெற தகுதி படைத்தோர் யார் என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ‘’ரேசன்  அட்டை வைத்திருப்போர். ரேசன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர். வாடகை ஒப்பந்தம்  வைத்திருபோர், கேஸ் பில் வைத்திருப்போர், ஆதார் அட்டையுடன் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருவோர் இந்த நிவாரணத் தொகை பெற தகுதியுடையோர்’’ என்று தெரிவித்துள்ளது.

ரூ.  6 ஆயிரம் மழை வெள்ள நிவாரணத் தொகையை  மூன்று பிரிவுகளாக அரசு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்