கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி - முதலமைச்சர்

திங்கள், 7 மே 2018 (08:30 IST)
கேரளாவில் மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மையம் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை ‘நீட்’ தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். மகனை நீட் தேர்வு எழுத கேரளா அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
இந்த மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,கஸ்தூரி மகாலிங்கத்தின் மேற்படிப்பு செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்