ரூ.101 கோடி செலவில் கால்நடை, மீன்வளத்துறை சார்பில் கட்டடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

வியாழன், 19 நவம்பர் 2015 (01:26 IST)
தமிழகத்தில், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 

 
தமிழகத்தி், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்,  கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மைய கட்டடம், ஆகியவற்றை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
மேலும், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்