கடலூரில் ரூ.100 கோடி முறைகேடு: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை

திங்கள், 14 டிசம்பர் 2015 (23:16 IST)
கடலூரில் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 100 கோடி செலவு செய்துள்ளதாக கூறும் சம்பவம் குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளி்யிட்டுள்ள அறிக்கையில், கடலூரில், மழை வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
 
மேலும், கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
 
ரூ.40 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாகவும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக செலவு செய்யப்பட்டதாக கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  தெரிவித்துள்ளார். இவைகள் நம்பும்படியகா இல்லை. இதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்