ஒரே இரவில் ரூ.128 கோடி பட்டுவாடா? உலக சாதனை செய்வாரா தினகரன்?

வியாழன், 6 ஏப்ரல் 2017 (21:56 IST)
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முடிவில் ஒரே ஒருநாள் இரவில் ரூ.128 கோடி பணத்தை, வாக்காளர்களுக்கு தினகரன் கோஷ்டி வாரி இரைத்துள்ளதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த திடுக்கிடும் தகவலால் இந்தியாவே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் தினகரன் உலக சாதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


வரும் 12ம் தேதி ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் அறிவிப்பு அறிவித்த நாள் முதலாக ஆர்கே நகரில் பணமழை கொட்டுகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம், காவல்துறை என பலரும் பலவித முயற்சிகள் எடுத்தாலும், எந்த ஒரு சிறு பலனும் இல்லை.

குறிப்பாக, சசிகலா அணி சார்பாக, தொப்பி சின்னத்தில் போட்டியிடும் தினகரன் கோஷ்டியினர் பணத்தை தண்ணீராக வாரி இரைத்து செலவு செய்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு, திமுக மற்றும் தீபா என பலரும் புகார் கூறி வருகின்றனர்.

எனவே தினம் தினம் பணப்பட்டுவாடா நடந்தால் சரியாக இருக்காது என்று முடிவு செய்து ஒரே நாளில் தொகுதி முழுவதும் பணத்தை கொடுக்க தினகரன் கோஷ்டி முடிவு செய்ததாகவும், இந்த வகையில் நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் ரூ.128 கோடி பணத்தை, வாக்காளர்களுக்கு, பிரித்து சத்தமே இல்லாமல், தினகரன் ஆதரவாளர்கள் விநியோகித்துவிட்டதாகவும், தற்போது ஓபிஎஸ் அணி கூறியுள்ளது. இவ்வளவு அராஜகங்களையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தேர்தல் கமிஷன் ஒரு அளவுக்கு மேல் பொறுமையிழந்து தேர்தலை ரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்