இந்நிலையில் பல்வேறு தமிழக பிரச்சனைகளில் கருத்து சொல்லும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் காரணமாக சாதாரண வாழ்க்கை வாழும் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்.
ஆனல் அதற்கே ஒரு 10, 20 பேர் என்னை திட்டினார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, வருத்தப்பட்டேன். ஆனால் இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏவையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டுது அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது என கூறியுள்ளார்.