ரேஷனில் அரிசி, சமையல் எண்ணெய் இலவசமாம்...!!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (08:41 IST)
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

 
புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பல முறை அனுப்பப்பட்ட கோப்புகளை அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்