ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திங்கள், 2 ஜனவரி 2017 (16:08 IST)
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற பொதுமக்கள், மாற்ற இயலாது என்று சென்னை ரிசர்வ் வங்கி தெரிவித்ததால் வங்கியை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.


 

 
டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே மாற்ற முடியும். இன்று காலை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சுமார் 150 பொதுமக்கள் பழைஅய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றனர்.
 
ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை இங்கு மாற்ற முடியும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 54 நாட்கள் ஆகியும் பணம் தட்டுபாடு சூழல் மாறவில்லை. டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிரகு பழைய ரூபாய் ரிசர்வ் வங்கி மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று தெரிவித்தது ஏன்? 

வெப்துனியாவைப் படிக்கவும்