விபத்தில் இறந்தால் பிள்ளைகளுக்கு நிவாரணம்…பேருந்து முன் பாய்ந்து தாய் தற்கொலை

திங்கள், 17 ஜூலை 2023 (21:08 IST)
சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் மறைமலையடிகள் தெருவில் வசித்து வந்தவர் பாப்பாத்தி. இவர், அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளாராக வேலை செய்து வந்தார்.

இவர் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த  நிலையில், கல்லூரியில் படிக்கும் மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இவர், இன்று கல்லூரியில் படிக்கும் தன் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாத சூழலில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், பாப்பாத்தி, தான் இறந்தால், நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு, இன்று பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்