வருமான வரித்துறை சோதனை எதிரொலி: பத்திர பதிவுத்துறை முக்கிய உத்தரவு..!

வியாழன், 6 ஜூலை 2023 (10:35 IST)
அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பத்திர பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருச்சி உறையூர், திருவள்ளூர் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐ.டி ரெய்டு  காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
 
மேலும் திருச்சி உறையூர், திருவள்ளூர் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐ.டி ரெய்டுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றும், 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் கோரப்பட்ட நிலையில் வழங்கப்பட்டன என்றும் பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
 
ஆவணம் பதிவுக்கு முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதார்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்