ஆக்சிஸ் வங்கி மீது எந்த நடவடிக்கையும் இல்லை - ரிசர்வ் வங்கி விளக்கம்
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:46 IST)
ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் தவறு என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் சில கிளைகளில் பணம் செலுத்துவது மற்றும் மாற்றுவது தொடர்பான பணப்பரிமாற்றத்தில் சில முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால், அந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் சில பத்திரிக்கைகளில் தகவல் வெளியானது.
ஆனால் அந்த தகவல் தவறாக பரப்பப்பட்ட வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ஆக்ஸின் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தகியா “ ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அப்படி வெளியான அனைத்து தகவல்களும் வதந்தி என ரிசர்வ் வங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.