நயினாருக்கு கொக்கி போடும் அதிமுக? ஹிண்ட் கிடைச்சாச்சு!!

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:52 IST)
நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து. 
 
தமிழகத்தில் பாஜக தொண்டர்கள், கட்சி செயல்பாடு குறித்து சமீபத்தில் தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக மீது அவர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு எழுந்தது.
 
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ள நயினார் நாகேந்திரன், வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு. என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள். அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். 
 
அதிமுகவில் பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சராக வலம் வந்த இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்