ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, போலீஸார் கூறுவதை கேளுங்கள் (வீடியோ)

திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:01 IST)
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொள்ளவில்லை, உடல்நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வந்த செய்தியை அடுத்து, ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சிறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
 
அதற்கு சிறைத்துறை அதிகாரி ஒருவர் ராம்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் கூறுகிறார். மேலும் இதுகுறித்து ராம்குமார் வீட்டிற்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
 
இந்த தொலைபேசி உரையாடல் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.
 
நன்றி: News7Tamil

வெப்துனியாவைப் படிக்கவும்