நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர்.
அப்போது அவர் பேசியது, ராம்குமாரை கைது செய்ய காவல் துறையினர் இரவு 11 மணிக்கு வந்தனர். ஆனால் ராம்குமார் தான் குற்றவாளி என உறுதிபடுத்தும் முன்னரே பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை விரட்டி விரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.
மேலும், ராம்குமார் பற்றி கூறும்போது, அண்ணன் இந்த கொலையை செய்திருப்பார் என்று எங்களால் நம்ப முடியவில்லை. படிப்பு விஷயத்தில் நிறைய உதவி செய்யும் ராம்குமார் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார்.