ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காணொலி மூலம் விசாரணை

செவ்வாய், 19 ஜூலை 2016 (08:01 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ராம்குமாரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.


 
 
இந்நிலையில் நேற்று புழல் சிறையில் உள்ள ராம்குமாரிடம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் காணொலி மூலம் விசாரணை செய்தார்.
 
ராம்குமாரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து ராம்குமாரை காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
 
இதனையடுத்து இந்த வழக்கில் 2 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்