ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி: தொடரும் டிரைவர்கள் பலி!
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (13:39 IST)
முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவின் கார் ஓட்டுனர் ரவிச்சந்திரன் சென்னையில் விபத்தில் சிக்கி உயிரழந்துள்ளார்.
ராமமோகனராவ் கூடுதல் தலைமைச்செயலாளராக இருந்தபோது ரவிச்சந்திரன் அவருக்கு கார் ஓடுனராக இருந்தார். இவர் இன்று பைக்கில் சென்றபோது தாம்பரம் அருகே தனியார் பேருந்து ஒன்று மோதி உயிரிழந்தார்.
சமீபத்தில் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் போலீசில் சரணடைய முயன்ற போது கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
அடுத்த நாளே அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முக்கிய பிரமுகர்களின் கார் ஓட்டுனர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி மரணமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.