ஜல்லிக்கட்டு தீவிரவாதத்தை விட கொடுமையானது - குரூர புத்தி காட்டும் ராம் கோபால் வர்மா
சனி, 21 ஜனவரி 2017 (13:45 IST)
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என நினைப்பவர்கள் காட்டுமிராண்டிகள் என பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ராம் கோபால் வர்மா எப்போது சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர். இந்நிலையில் தமிழககெங்கும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் போரட்டங்களுக்கு எதிராக இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏராளமான கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் விலங்குகளை துன்புறுத்தப்படக்கூடாது என அரசு கண்டிப்பாக இருக்கிறது. ஆனல், கலாச்சாரம் என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுவதை அரசே அனுமதிக்கிறது..
ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டித்தனம். கலாச்சாரம் என்ற பெயரில் மக்களின் மகிழ்ச்சிக்காக விலங்குகளை துன்புறுத்தப்படுவது தீவிரவாதத்தை விட கொடுமையானது. ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடுபவர்களை 100 மாடுகளை கொண்டு துரத்த விட வேண்டும். அவைகளிடமிருந்து தப்பித்து ஓடும் போது அவர்களின் உணர்வு என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்.
கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவது சரி எனில், அல் கொய்தா தீவிரவாதிகள், அப்பாவி மக்களின் தலையை வெட்டுவதும் சரியான ஒன்றுதான். ஜல்லிக்கட்டிற்காக போராடுபவர்கள் ஒருவருக்கும் கலாச்சாரத்தின் அர்த்தமே தெரியாது. அவர்கள் ரத்தம் குடிக்கும் காட்டேறிகள்.
வெறும் ஓட்டுக்காகவும், சினிமா டிக்கெட் வாங்குவதற்காகவும்தான் ஜல்லிக்கட்டை அரசியல்வாதிகளும், நடிகர்களும் ஆதரிக்கிறார்கள். மாடுகளுக்கு மட்டும் ஓட்டு போடவும் மற்றும் சினிமா டிக்கெட் வாங்கவும் தெரிந்திருந்தால் நடிகர்களும், அரசியல்வாதிகளும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் கருத்துகளுக்கு சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.