ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !அதன்பின் கேப்டனை முடிவு செய்யலாம் - வானதி சீனிவாசன்
சனி, 5 செப்டம்பர் 2020 (16:17 IST)
தமிழக அரசியலில் ரஜினி காந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று ஆர்வம் எழுந்துள்ளது.
நேற்று ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு, அதில் தான் ரஜினி என் குரு அவரது ஆன்மீக அரசியலில் தானும் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பஜாக தலைவர் வானதி சீனிவாசன், அரசியல் களத்திற்கு கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டுமெனவும், அதன் பின்னர் கேப்டன் யார் என்பதை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஜினி விரும்பினால் கூட்டணிக்கு வரலாம் என நயினார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.