முஸ்லிம்கள் பாதுகாப்பா? அரசியல் வரவா? ரஜினி மீட்டிங்கின் பின்னணி என்ன??

புதன், 4 மார்ச் 2020 (12:46 IST)
நடிகர் ரஜினிகாந்த், தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசியதால் இஸ்லாமிய அமைப்பினர்களின் அதிருப்திக்கு ரஜினி ஆளாவார் என எதிர்பார்த்த நிலையில் இஸ்லாமியர்களுடன் அவர் நெருக்கமாகி உள்ளார். இதன வெளிப்பாடாக தமிழகத்தின் ஒருசில இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 
 
இந்த சந்திப்பிற்கு பின்னர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்கின்றார் என்றும் இந்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கண்டிப்பாக குரல் கொடுப்பார் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் பேட்டி அளித்தனர். 
இந்நிலையில், பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த், நாளை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
ஆனால், ரஜினி சிஏஏ குறித்தும் முஸ்லிம்களுக்கு நல்லதையே செய்வேன் என கூறியதைஉம் குறித்து ஆலோசிப்பார் எனவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்