விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினார்

செவ்வாய், 1 டிசம்பர் 2015 (23:19 IST)
தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதிக்கு நடிகர்கள் சிலர் நிதி உதவி வழங்கி வந்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.


 
 
தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து பலபகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் வீடுகள் இன்றி சமூக கூடங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ் நடிகர்கள் சிலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
 
இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் வழங்கி வந்தனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், பிரபு, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், சத்தியராஜ், சிபிராஜ் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை தற்போது வழங்கியுள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்காமல் இருந்ததால் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது
 
இந்த விமர்சனங்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திர அறக்கட்டளை மூலம் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி பெயரிலான காசோலையை சேர்த்து அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்