இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனினும் கட்சியின் கொள்கையை பற்றியோ பேரை பற்றியோ எதுவும் அறிவிக்கவில்லை. இதனிடையே ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவும் பலர் கூறி வந்தனர். அவரது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அவரது கருத்துகளும், காஷ்மீர் குறித்தான கடுத்துகளும் அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களை கிளப்பியது.
மேலும் அவரது பல பேட்டிகளில் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என பலமுறை கூறிவந்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை பேட்டியளித்த காந்தி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழருவி மணியன் , அடுத்த ஆண்டு நிச்சயமாக ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் எனவும், அவர் ஆழ்ந்து சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக பாதகங்களை அலசி ஆராய்பவர் எனவும் கூறியுள்ளார்.