’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ - ராஜேந்திர பாலாஜி

ஞாயிறு, 10 மார்ச் 2019 (11:02 IST)
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர்  நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். 
இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி சினிமா துறையைப் போலவே அரசியலிலும் வேகமாக வளர்ந்து வருகிறார்.
 
ரஜினி தன் அரசியல் வருகையை அறித்தும்  இன்னும் அவரது ரசிகர்களை குழப்பி வருகிறார். இப்படி சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல கருத்துகளை கூறி விமர்சித்து வருகின்றனர். சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருக்கிறார். 
அவர் தெரிவித்துள்ளதாவது :
 
அரசியலுக்கு நடிகர்கள் வியாபார நோக்குடன் தான் வருகிறார்கள்,. கட்சி தொடங்கியுள்ள நடிகர்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் காணாமல் போவார்கள், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது சாணக்கியத்தனம் ன்று சிவகாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சர் ரஜேந்திர பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்