இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வியாழன், 2 ஜூன் 2016 (12:19 IST)
தமிழகத்தில் கத்திரி வெயிலின் காலம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை நீடித்து வந்தது.


 
 
இந்நிலையில் வெப்பச் சலனத்தின் காரணமாக, இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வெப்பம் இன்னும் ஒரு சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் எனவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
 
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்