ஜூலை 22, 23 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்துள்ளது. கிண்டி, வடபழனி வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.