மழை பேரிடர்: தமிழ்நாட்டு மக்களும் இந்திய குடிமக்கள்தான்! ஒன்றிய அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன், 28 டிசம்பர் 2023 (15:53 IST)
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை இயற்கை பேரிடராக அறிவிக்க தொடர்ந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.



கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அளவுக்கு அதிகமான மழையால் பல வசிப்பிடங்கள் நீரில் மூழ்கின. பல்வேறு நீர்நிலைகளில் உடைப்பு எடுத்ததால் ஊரை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

ஆனால் இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது ஏற்கனவே மழை குறித்த எச்சரிக்கை மாநில அரசுக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் இதை இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்,. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது,.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ”இந்திய அரசு அனைத்து மக்களையும் இந்திய குடிமக்களாகவே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்கக் கூடியவர்கள்தான்” என்று தெரிவித்துள்ளது. மேலும் 4 மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பது குறித்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்