மீண்டும் கனமழை... 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Siva

வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:28 IST)
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் கனமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


ALSO READ: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை: சரத் பவார் கருத்து

மேலும் இன்று முதல் 10ச்ச், தேதி வரை தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  கேரள கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்