ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் இருமடங்கு உயர்வு: அதிர்ச்சியில் பயணிகள்

சனி, 1 அக்டோபர் 2022 (14:24 IST)
ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் இருமடங்கு உயர்வு: அதிர்ச்சியில் பயணிகள்
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இர்ஹுவரை பத்து ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்த நிலையில் இன்று முதல் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் ரயில் பயணிகளை வழியனுப்ப வரும் பயணிகளின் உறவினர்கள் பிளாட்பார்ம் டிக்கெட்  பத்து ரூபாய் கொடுத்து எடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் என்று அமலுக்கு வந்துள்ளதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்