சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐஜி பொன். மாணிக்கவேல் திருடப்பட்ட பல சிலைகளை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறார். சமீபத்தில் கூட சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்ற குழு 89 சிலைகளை பறிமுதல் செய்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. தஞ்சை கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.