இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சசிகலா விடுதலையாகி வந்ததும் அதிமுக – அமமுகவை இணைப்பார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அமமுக வட்டாரத்தில் பலத்தரப்பட்ட தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசிய அமைச்சர் ஆர்பி உதயகுமார் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய அவர் “அதிமுகவில் இடைவெளி உருவானால் உள்ளே புகுந்து விடலாம் என சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது. “ஊரெங்கும் ஒரே பேச்சு, 2021ல் அதிமுக ஆட்சி” என அவர் தெரிவித்துள்ளார்.