கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையில்,
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், "கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.