இன்று நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் கசிவு.. நெல்லை பல்கலையில் அதிர்ச்சி..!

Siva

செவ்வாய், 27 மே 2025 (10:26 IST)
திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ‘இண்டஸ்ட்ரியல் லா’ என்ற பாடத் திட்டத்தின் தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால், அந்த பரிட்சையின் தேர்வின் முன்கூட்டியே வெளியில் வந்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்து, தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 106 கல்லூரிகளுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
தள்ளிவைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31ம் தேதிகளில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. சரியான தேதியுடன் கூடிய முழுமையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வினாத்தாள் எப்படி கசியப்பட்டது, யாரால் இது நிகழ்ந்தது என்பதற்கான விசாரணைகள் பல்கலைக்கழகம் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலமாக முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த சூழ்நிலையில் குழப்பமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்காகவே எடுக்கப்பட்டவை என அதிகாரிகள் விளக்குகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்