இந்த நிலையில் ஏற்கனவே அதிமுகவுக்கு ஒரு சில கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய நீதி கட்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு புதிய நீதி கட்சி முழு ஆதரவு தந்து அக்கட்சியின் வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய முழுமையாக ஒத்துழைக்கும் என அறிவித்துள்ளது.