டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான்: அதிர்ச்சியில் குடிமகன்..!

செவ்வாய், 13 ஜூன் 2023 (07:46 IST)
டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான் இருந்ததை அடுத்து அந்த பாட்டிலை வாங்கிய குடிமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டிலை வாங்கிய குடிமகன் ஒருவர் அந்த பாட்டிலை ஓபன் செய்தபோது உள்ளே ஏதோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அது பூரான் என்பது தெரிய வந்ததை அடுத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். 
 
உடனே டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் பூரான் இருந்த மது பாட்டிலை காட்டி அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த விற்பனையாளர் சீனாவில் முக்கிய உணவு பூரான் என்றும் அதை பெரிதாக நினைக்க வேண்டாம் என்றும் அலட்சியமாக பதில் கூறினார். மேலும் அந்த மது பாட்டிலை பறித்துக் கொண்டு வேறு பாட்டிலை கொடுத்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மது பாட்டிலை வாங்கிய நபர் கூறியபோது பூரான் மது பாட்டிலில் இருந்ததற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்