ராமதாஸ் ஒரு பொலிட்டிக்கல் புரோக்கர்: புகழேந்தி பொளேர்!!

புதன், 27 பிப்ரவரி 2019 (11:27 IST)
ராமதாஸ் ஒரு பொலிட்டிக்கல் புரோக்கர் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.


இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜக வோடுக் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மற்றும் பாமகவை சேர்ந்த பலர் பாமக தலைமையை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசுகையில், ராமதாஸ் ஒரு பொலிட்டிக்கல் புரோக்கர். இதை நான் கூறவில்லை அம்மாவே கூறியிருக்கிறார். அப்படியிருக்க அதிமுக எப்படி பாமகவுடன் கூட்டணி வைத்து அவர்கள் வீட்டிற்கே சென்று விருந்து சாப்பிடுகிறார்கள். இது வெட்கக்கேடு என புகழேந்தி கடுமையாக பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்