புதுச்சேரியில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்! – அதிமுகவுக்கு எவ்வளவு?

புதன், 10 மார்ச் 2021 (11:08 IST)
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் தொகுதி பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக, என்.ஏர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மூன்று கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக மேலிட பொறுப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று யார் யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து இன்று முடிவாகும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்