கூச்சம் குழப்பம்: தொடங்கிய 21 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்ட புதுவை சட்டமன்ற கூட்டம்!

புதன், 23 பிப்ரவரி 2022 (15:26 IST)
புதுவை சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் தொடங்கிய 21 நிமிடங்களில் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதை அடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
ஆனால் இந்த கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்தார். இதனை அடுத்து கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
முன்னதாக சட்டப்பேரவை தொடங்கிய பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வரைவை சட்டப்பேரவை தலைவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
saட்டபேரவை கூட்டம் தொடங்கியது 21 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்