கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முன் மாணவி எழுதி வைத்த தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி முதல்வரையும் கைது செய்ய வேண்டும் என கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.