சுவாதி வழக்கில் திருப்பம் : அரசு வழக்கறிஞர் திடீர் மாற்றம்

வியாழன், 8 செப்டம்பர் 2016 (12:16 IST)
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், திடீர் திருப்பமாக அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார்.



சென்னை, சூளைமேட்டில் வசித்து வந்த பெண் பொறியாளரான சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுவாதி வழக்கில் ராம்குமார் நிரபராதி என்று அவரின் வழக்கறிஞர் ராமராஜ் தொடர்ந்து கூறிவருகிறார். அதேபோல், சமூக வலைத்தளதில் தமிழச்சி மற்றும் திலீபன் மகேந்திரன் ஆகியோரும் ராம்குமாருக்கு ஆதவாகவும், போலீசாருக்கு எதிராகவும் கருத்து கூறிவருகின்றனர்.

தொடர்ந்து மர்மம் நீடிக்கும் வேளையில், இந்த வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

சுவாதி வழக்கில் அரசு வழக்கறிஞராக செயல்பட்டு வந்த கொளஞ்சியன் என்பவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கோபிநாத் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்