இந்த கொரோனா காலத்தில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை கடைக்காரர்கள் இது தான் சமயம் என்று தங்களது இஷ்டத்துக்கும் விலைகளை நிர்ணயித்து வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதாக மக்கள் புகார் தெரிவித்து இதற்காக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையில் கவனம் செலுத்திய தமிழக அரசு தற்போது கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.