நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்ற பிரேமலதா தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

சனி, 30 ஜனவரி 2021 (21:45 IST)
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரவாயலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லும் வழியில் போலீசாரால் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் தேர்தல் சூழல் தொடங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துவிட்டன. அதேபோல் கூட்டணி அமைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன
 
இந்த நிலையில் தேமுதிக கட்சி, அதிமுக கூட்டணி நீடிக்குமா அல்லது திமுக கூட்டணிக்கு தாவுமா அல்லது தனி அணி அமைக்குமா என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது இந்த நிலையில் மதுரவாயலில் இன்று தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் வழியில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து அவர் ஆவேசமாக நிர்வாகி கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக என்பது யாரோ தொடங்கிய கட்சியில் பாதியில் நுழைந்து கட்சி அல்ல என்றும் தேமுதிகவை கண்டு ஏன் அஞ்சுகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் இந்த கேள்வியை அவர் ஆளுங்கட்சிக்கு எழுப்பி உள்ளதாகவே கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்