படமெடுத்த நாகப் பாம்புடன் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட்: காதல் ஜோடியின் விபரீத ஆசை..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (15:00 IST)
படம் எடுத்து ஆடிய நாகப் பாம்புடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் என்பது தற்போது ஒரு கலாச்சாரம் ஆகி உள்ள நிலையில் ஆபாச ஆடைகளுடன் கூடிய ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் பச்சை நிற தோட்டம் ஒன்றில் மரங்கள் செடிகள் சூழ்ந்த வீடு ஒன்றில் ஒரு பெண் நடந்து வருகிறார், அப்போது அவரை அவர் ஒரு நாகப்பாம்பை பார்க்கிறார். உடனடியாக அதை பிடிக்க ஃபோன் செய்கிறார். தொடர்ந்து இரண்டு பேரும் ஒரு ஸ்கூட்டியில் வருகின்றனர். அதில் ஒருவர் பாம்பை பிடிக்கிறார், உடனே அந்த பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது. உடனடியாக இருவரும் இணைகின்றனர், காதல் செய்கின்றனர் இறுதியில் இருவரும் திருமண செய்ய முடிவு செய்தபோது பின்பக்கம் பாம்பு படம் எடுத்திருக்கிறது 
 
இப்படியாக அந்த போட்டோ ஷூட் மூலம் காதல் கதை சொல்லப்படுகிறது. இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்