கரூரில் 5 பணிமனைகளில் இருந்து 148 பேருந்துகள் இயக்க முன் ஏற்பாடுகள் தீவிரம்

திங்கள், 1 ஜூன் 2020 (23:52 IST)
கரூர் மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளில் இருந்து 148 பேருந்துகள் இயக்க முன் ஏற்பாடுகள் தீவிரம் - பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.

கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கரூர் கிளை - 1, கரூர் கிளை - 2, அரவக்குறிச்சி கிளை, குளித்தலை கிளை, முசிறி கிளை உள்ளிட்ட 5 பணிமனைகளில் 295 பேருந்துகள் உள்ளன. இதில் 50 சதவீதம் பேருந்துகளாக 148 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளை பழுது பார்த்தல், கிருமி நாசினி அடித்தல் போன்ற பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நகர பேருந்துகளில் 24 பேரும், தொலை தூரப் பேருந்துகளில் 32 பேர் பயணம் செய்யலாம் என்றும், பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு வரும் போது கட்டாயமாக கை கழுவ வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு செல்லும் போது கிருமி நாசினி, முக கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரகுடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மாத்திரிகைகளும் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கரூரில் இருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்