பவர்பேங்க் செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நபர்கள்!

ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:38 IST)
பவர்பேங்க் செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நபர்கள்!
பவர் பேங்க் என்ற செயலின் மூலம் லட்சக் கணக்கில் பணம் இழந்த நபர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பவர் பேங்க், டெஸ்லா பவர் பேங்க் ஆகிய செல்போன் செயலிகளில் முதலீடு செய்தால் இரட்டிப்பாகும் என்றும் ஒரு சில நாட்களில் இருமடங்காக மாறும் என்றும் ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை செலுத்திய நிலையில் அவர்களது பணம் தற்போது மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
 
முதலில் ஒரு சிறிய தொகையை பெற்று அதை இரட்டிப்பாக கொடுத்து ஆசை வார்த்தை காட்டும் இந்த நபர்கள் அதன்பிறகு பெரிய தொகை கிடைக்கும் போது எஸ்கேப் ஆகி விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நபர்கள் பணத்தை செலுத்த வங்கி கணக்கை கொடுக்காமல் கூகுள்பே, பேடிஎம் போன்ற இணைய வழி பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதித்த செயலிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவர் பேங்க் செயலி மூலம் லட்சக் கணக்கில் ஏமாந்த 34 பேர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்