இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியைடைந்ததற்கு ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதோடு, தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.