சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மாத இறுதியில் சசிகலா பொதுச்செயலாளர் ஆக கூடும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் சசிகலாவுக்கு எதிராக ஆர்.கே.நகர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், அம்மாவின் அரசியல் வாரிசாக பணம், பதவிக்காக ஆசைப்படும் சசிகலா அவர்களே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நின்று வென்று, கழக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள் என கூறப்பட்டுள்ளது.