தமிழக மக்களின் கவனத்திற்கு: 2 நாட்கள் மழை பெய்யும்!

புதன், 28 செப்டம்பர் 2016 (21:57 IST)
மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவுக்கு சென்றது.


 
 
தற்போது அந்த காற்றழுத்தம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்துக்கு அதிக மழை தரும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு முன்னதாக தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்