போரூர் ஏரியில் குதித்த நபரை காப்பாற்றிய காவல்துறை துணை ஆய்வாளர்

சனி, 28 நவம்பர் 2015 (13:09 IST)
குடும்பத் தகராறு காரணமாக மேம்பாலத்தில் இருந்து போரூர் ஏரியில் குதித்த நபரை காவல்துறை துணை ஆய்வாளர் கோதண்டம் காப்பாற்றியுள்ளார்.


 

 
கடந்த மாதம் நீரின்றி காணப்பட்ட போரூர் ஏரி, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நிரம்பியயுள்ளது.
 
இந்த ஏரிக்கு மேலாக மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையின் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து போரூர் ஏரியின் 8 ஆவது தூணுக்க அருகே ஒருவர் ஏரியில் குதித்தார்.
 
அப்போது ஏரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆணை ஆய்வாளர் கோதண்டம் இதைப் பார்த்தார்.
 
உடனே, அவர் ஏரிக்கள் நீந்திச் சென்று, நீர்ல் தத்தளித்துக் கொண்டிருந்தவரை மீட்டார். இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
அவர்கள் விரைந்து வந்தனர். காரையில் பிடித்துவைக்கப்பட்டிருந்த அவரை ஏரிக்கு வெளியே கொண்டுவந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, போரூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்.
 
அந்த விசாரணையில், அவரது பெயர் சதீஷ் குமார் என்பதும், மாங்காட்டை அடுத்துள்ள பட்டு சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
 
தனது மனைவி எல்லம்மாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சதீஷ் குமார் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் போரூர் ஏரியில் குதித்தது தெரிய வந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்